பெரியகுளத்தில் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்

65பார்த்தது
பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் இன்று காலை முதல் ஊதியம் மற்றும் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஒப்பந்த நிறுவனத்தினர் துப்புரவு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாலை ஊதியம் வழங்கினர். மேலும் தீபாவளி போனஸ் வருகின்ற திங்கட்கிழமை வழங்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி