தென்கரையில் உள்ள அருள்மிகு பாலசுப்ரமணியம் திருக்கோயிலில் திருக்கல்யாணம் வைபோகம் நடைபெற்றது. இந்த திருக்கல்யாணத்தில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டு முருகன் வள்ளி தெய்வானை சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்து வழிபாடு செய்தனர். அதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு கோயில் நிர்வாகிகள் பிரசாதங்கள் வழங்கினர்.