தேனி மாவட்டம் கம்பத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.265.00 இலட்சம் மதிப்பீட்டில் ஆம்னி பேரூந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கட்டுமான பணிகளை நகரமன்ற தலைவர் வனிதா நெப்போலியன் நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டார். இதில் நகராட்சி பொறியாளர் அய்யனார், உதவி பொறியாளர் சந்தோஷ் மற்றும் ஒப்பந்ததாரர்கள் உடனிருந்தனர்.