பெரியகுளம் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளிலும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசு அறிவித்த தீபாவளி போனஸ் மற்றும் முறையாக ஊதியம் வழங்காததால், ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இன்று நகராட்சி அலுவலகத்துக்குள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், உடனடியாக தீபாவளி போனஸ் மற்றும் ஊதியம் வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.