போடி: ஆபாச வீடியோ அனுப்பிய ராணுவ வீரர் மீது வழக்கு
தேனி மாவட்டம் போடி சங்கராபுரம் பகுதியை சேர்ந்த அமுதா என்பவர் தனது கணவருடன் இராணுவத்தில் பணிபுரியும் மணிராஜா என்பவர் தன்னிடம் 18 பவுன் நகை, 60,000 ரூபாய் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாகவும், பணத்தை திருப்பி கேட்ட நிலையில் தன்னுடன் நெருக்கமாக இருந்த போட்டோ, வீடியோவை மணிராஜா மற்றும் அவரது மனைவி ஜோதிலட்சுமி தனக்கு அனுப்பி மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்தார். இது குறித்து தம்பதிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.