பேராவூரணியில் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்

80பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், தமிழர் தேசம் கட்சி சார்பில், கட்சியின் நிறுவனர், தலைவர் கே. கே. செல்வகுமார் பிறந்த நாளை முன்னிட்டு, முதலாம் ஆண்டு மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.  

இதனை, தமிழர் தேசம் கட்சி நிறுவனர், தலைவர் கே. கே. செல்வகுமார், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார், பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு எம். முருகானந்தம், முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மா. கோவிந்தராசு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.  

இதில் பெரிய மாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு மாடு என மூன்று பிரிவுகள் நடத்தப்பட்ட போட்டியில், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 
50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றன.  

வெற்றி பெற்ற 
மாட்டுவண்டிகளின் உரிமையாளர்களுக்கு,  
சுமார் 1. 5 லட்சம் மொத்தப் பரிசாக வழங்கப்பட்டது. பந்தயத்தில் கலந்து கொண்ட மாட்டு வண்டிகள் எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்தன. மாட்டுவண்டி பந்தயத்தை சாலையில் இருமருங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான பந்தயக்கலா ரசிகர்கள் கண்டு களித்தனர். பேராவூரணி காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி