தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், பொன்னாங்கண்ணிக்காடு கிராமத்தில், ஸ்ரீ அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் வருடாந்திர அபிஷேக விழாவை முன்னிட்டு, ஸ்ரீ அடைக்கலம் காத்த அய்யனார் குரூப்ஸ் மற்றும் வள்ளுவர் நற்பணி மன்றம் சார்பில் மாட்டுவண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.
பெரிய மாடு, நடுமாடு, பூஞ்சிட்டு மாடு, நடுக்குதிரை என நான்கு பிரிவுகளில் நடைபெற்ற மாட்டு வண்டி, குதிரை வண்டிப் பந்தயத்தை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் தலைமை வகித்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில், வெற்றி பெற்றவர்களுக்கு சுமார் ரூ. 3 லட்சம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். எல்லையை நோக்கி சீறிவந்த மாட்டுவண்டி, குதிரைவண்டிகளை சாலையில் இருபுறமும் ஆயிரக்கணக்கானோர் நின்று பார்வையிட்டு ரசித்தனர்.