தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் மீன் பிடி துறைமுகத்தில், தமிழ்நாடு மீனவர் பேரவை, பாரம்பரிய நாட்டுப் படகு மீனவர் சங்கம், பாரம்பரிய விசைப்படகு மீனவர் சங்கம் ஆகியவை ஒருங்கிணைந்து இஃப்தார் நிகழ்ச்சி நடத்தினர். இந்நிகழ்வில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார், சேதுபாவாசத்திரம் முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் மு. கி. முத்துமாணிக்கம், காங்கிரஸ் கட்சி பண்ணவயல் சு. ராஜாத்தம்பி, தமிழ்நாடு மீனவர் நலவாரியத் துணைத் தலைவர் தாஜூதீன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், மீனவர் சங்க நிர்வாகிகள், மீன்வளத்துறை அதிகாரிகள், சேதுபாவாசத்திரம் காவல்துறை அலுவலர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், இராமர் கோவில் தெரு பஞ்சாயத்தார்கள், சின்னமனை பஞ்சாயத்தார்கள், மல்லிப்பட்டினம் ஜமாஅத்தார்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.