பேராவூரணி அருகே மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்

81பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுகா நாட்டாணிக்கோட்டை வடக்கு, கோட்டை வெல்ஃபேர் அசோசியேசன் மற்றும் கிராமத்தினர் சார்பில், முதலாம் ஆண்டு மாட்டுவண்டி எல்லைப் பந்தயம் நாட்டாணிக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பெரிய மாடு, சின்ன மாடு, பூஞ்சிட்டு மாடு என 3 பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டியில் தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மாட்டுவண்டிகள் கலந்துகொண்டன. 

போட்டிகளை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் கொடியசைத்து துவக்கிவைத்தார். பின்னர் வெற்றிபெற்ற மாட்டுவண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மாட்டுவண்டி பந்தயத்தை சாலையின் இருபுறமும் ஏராளமான பந்தய ரசிகர்கள் காத்திருந்து கண்டு ரசித்தனர். வெற்றிபெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கும், கொடிப்பரிசாகவும் மொத்தம் ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. மேலும், மாட்டுவண்டிகளின் சாரதிக்கு செல்போன்கள் பரிசு வழங்கப்பட்டது. பந்தய விழாவில், அதிமுக நகரச் செயலாளர் எம். எஸ். நீலகண்டன், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ. அப்துல்மஜீத், பேரூராட்சி கவுன்சிலர்கள் வீ. ப. நீலகண்டன், மணிமாலா நீலகண்டன், ரேக்ளா சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி