தஞ்சை: மாணவிகளுக்கு பெண் கல்வி ஊக்கத்தொகை வழங்க நிதி ஒதுக்கீடு

84பார்த்தது
தஞ்சை: மாணவிகளுக்கு பெண் கல்வி ஊக்கத்தொகை வழங்க நிதி ஒதுக்கீடு
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்கள் மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்துக்குள் இருக்கும் 3 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை பயிலும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (MBC/DNC) இன மாணவிகளுக்கான பெண்கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கு செயல்படுத்தப்படுகிறது. இதன் பொருட்டு 985 கிராமப்புற மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்களிடம் இருந்து 7,964 மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கிடும் பொருட்டு கேட்பு பட்டியல்கள் தொடர்புடைய மாவட்ட மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் பெறப்பட்டுள்ளது. அம்மாணவிகளுக்கான கல்வி ஊக்கத்தொகை கூடுதல் ரூ. 49,03,000/-ஐ சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. அத்தொகை தலைமையாசிரியர்கள் மூலம் தொடர்புடைய மாணவியர் அல்லது பெற்றோர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி