பட்டுக்கோட்டையில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

65பார்த்தது
பட்டுக்கோட்டையில் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணி- நூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனியார் நிறுவனங்கள் சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. வாகன பேரணி ஆலடிக்குமுலை பைபாஸ் சாலை அருகே துவங்கிய நிலையில் பட்டுக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் நசீர் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். 

இதில் பங்கேற்ற அனைவரும் ஹெல்மெட் அணிந்து பேரணியாக அறந்தாங்கி முக்கம், தலைமை தபால் நிலையம், மணிக்கூண்டு வழியாக பேருந்து நிலையம் வந்தடைந்து அதன் பின்பு மீண்டும் பேரணி துவங்கிய இடத்திற்கே சென்று நிறைவடைந்தது. இந்த வாகன பேரணியில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஹெல்மெட் அணிவதின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி