தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, ஆடுதுறை அருகே உள்ள கோவிந்தபுரத்தில் விட்டல் ருக்மணி பாண்டுரங்கன் கோயில் உள்ளது. தட்சிண பண்டரிபுரம் என போற்றப்படும் இங்கு அமைந்துள்ள கோசாலையில் 1000க்கும் மேற்பட்ட நாட்டு பசுக்கள் உள்ளன. ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தை முன்னிட்டு பக்தர்கள் பங்கேற்கும் கோபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெறும்.
அந்த வகையில் நேற்று மாட்டுப் பொங்கல் தினத்தை முன்னிட்டு அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் பசுக்களுக்கு கோபூஜை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். கோபூஜை செய்ய ஏதுவாக பக்தர்களுக்கு தனித்தனியே மஞ்சள், சந்தனம், குங்குமம், பத்தி மற்றும் சூடம் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் பங்கேற்று கோபூஜை செய்து வழிபாடு நடத்தினர்.