பட்டுக்கோட்டை - Pattukottai

பட்டுக்கோட்டையில் முடி திருத்தும் தொழிலாளர் சங்க கூட்டம்

பட்டுக்கோட்டையில் முடி திருத்தும் தொழிலாளர் சங்க கூட்டம்

பட்டுக்கோட்டை அய்யனார் அரங்கில் தமிழ்நாடு மருத்துவர் சமுதாய முடி திருத்தும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தலைவர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். மோகன், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பட்டப்படிப்புக்கு தரவரிசை இன்றி இட ஒதுக்கீட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்க்கை வழங்க வேண்டும். தொழில் கடன், கல்விக்கடன், கல்வி ஊக்கத்தொகை, வேலைவாய்ப்பில் முன்னுரிமை - வழங்க வேண்டும். இலவச வீடு கட்டித்தர வேண்டும். சித்த - மருத்துவ படிப்புக்கு இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் திரளான முடி திருத்தும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా