தமிழகத்திலே டாஸ்மாக் நிறுவனத்தில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு நடந்திருப்பதாகவும் இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தி வருகிறது இந்நிலையில் போராட்டம் நடத்திய தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை காவல்துறையினர் கைது செய்யப்பட்டார் இந்நிலையில் பட்டுக்கோட்டை பாஜகவினர் டாஸ்மாக் ஊழல் முறைகேடுகளை கண்டித்தும் பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்தும் பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே டிஎஸ்பி அலுவலகம் எதிரே உள்ள மதுபான கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடும் என்றனர் இதையடுத்து பட்டுக்கோட்டை காவல்துறையினர் இரண்டு பெண்கள் உள்ளிட்ட 50 பேரை கைது செய்தனர்.