கீரைகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளதால் இது மன அழுத்தம் மற்றும் பதற்றத்தின் அறிகுறிகளை குறைக்க உதவும். சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளதோடு, அழற்சி எதிர்ப்புப் பண்புகளையும் கொண்டுள்ளதால் இது மனச்சோர்வு மற்றும் பதற்றத்தின் அறிகுறிகளை குறைக்க உதவுகின்றன. ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி பழங்களும் பலன் தரும்.