பட்டுக்கோட்டை அரசு தொடக்கப்பள்ளியில் உலக தண்ணீர் தின விழா

54பார்த்தது
பட்டுக்கோட்டை அரசு தொடக்கப்பள்ளியில் உலக தண்ணீர் தின விழா
தஞ்சாவூர் ஆர். வி. எஸ் வேளாண்மைக் கல்லூரி, மாணவர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் (RAWE) திட்டத்தின் கீழ், பட்டுக்கோட்டை அருகே கள்ளிக்காடு அரசு தொடக்கப்பள்ளியில் உலக தண்ணீர் தினத்தை கொண்டாடினர். விழாவின் தொடக்கத்தில், வேளாண் கல்லூரி மாணவர்கள் மழை நீர் சேகரிப்பு மற்றும் கழிவு நீர் மீள் சுழற்சி பற்றிய முக்கியத்துவத்தைக் கூறி, தாங்கள் தயாரித்த மாதிரிகள் மூலம் பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பின்னர், மாணவர்களால் கிராமம் முழுவதும் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. 

இதில் மாணவர்கள் பதாகைகள் தாங்கி, நீர் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தும் முழக்கங்களை எழுப்பினர். இதில், பள்ளி தலைமை ஆசிரியர், மாணவர்கள், கிராமத்தினர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ஆர். வி. எஸ் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் ல. பிரதீப், பா. முகிலன், பா. முத்துக்குமரன், ப. இ. முகமது ஆஸிம் முர்ஷித், உ. முகமது சிமர், கி. பவித்ரன், சு. நடராஜன், செ. பிரகாஷ், ர. மாதேஸ்வரன், ச. மொரேஸ் மற்றும் புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண்மைக் கல்லூரி மாணவர்களும், திருச்சி அரசு வேளாண்மைக் கல்லூரி மாணவிகளும் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி