ஏப்ரல் 2வது வாரத்தில் தமிழ்நாடு அல்லது தெற்கு ஆந்திரா பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், "இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழ்நாட்டை விட்டு நகர்ந்த பின் வெப்பம் இன்னும் அதிகரிக்கும். ஏப்ரல் மாத தொடக்கத்தில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி குறித்த தெளிவு கிடைக்கும்" என கணித்துள்ளார்.