ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து ஒவ்வொரு ஒன்றியத்திலும் 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 100 நாள் வேலை திட்டத்துக்கான தமிழ்நாட்டுக்குரிய நிதி ரூ.4,034 கோடியை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை. இந்நிலையில், மாநில உரிமைகளுக்காக நடைபெறும் இப்போராட்டத்தில் கிராமப்புற ஆண், பெண் தொழிலாளர்களை பங்கேற்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.