சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள டெலிகாம் அலுவலகத்தின் முதல் மாடியில் சிக்னல் கட்டுப்பாட்டு அறையில் ஏசியில் ஏற்பட்ட மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் சென்னை எழும்பூர் - கடற்கரை மார்க்கத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்படைந்துள்ளதால் அதனை சீரமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.