பட்டுக்கோட்டை - Pattukottai

தஞ்சை: வேளாண் பணியில் டிரோன்கள் பயன்பாடு குறித்து மகளிருக்கு பயிற்சி

தஞ்சை: வேளாண் பணியில் டிரோன்கள் பயன்பாடு குறித்து மகளிருக்கு பயிற்சி

மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக டிரோன்களை இயக்குவது குறித்து பயிற்சியை IFFCO நிறுவனத்தின் மூலம் மகளிருக்கு அளித்து அதன் பின்னர் உரிய உரிமங்களை பயிற்சி பெற்ற மகளிருக்கு வழங்கி அவர்கள் மூலம் டிரோன்களை இயக்கி விவசாயத்தை நவீனமயமாக்குவதே இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாகும்.  முதல் கட்டமாக தமிழ்நாட்டில் நமது மாவட்டத்தில் பிரபல உர நிறுவனமான IFFCO நிறுவனத்தின் மூலம் சென்னையில் மாநில அளவில் பயிற்சி அளிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் பயிற்சி பெற்ற உறுப்பினர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்நிறுவனத்தின் மூலம் ஒரத்தநாடு வட்டாரத்தில் உள்ள மேலுளுர் மற்றும் பொய்யுண்டார்கோட்டை ஊராட்சிகளின் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் தாழம்பு மற்றும் இமயம் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு தலா ஓரு டிரோன் வீதம் இந்நிறுவனத்தின் மூலம் 2 டிரோன்கள் வழங்கப்பட்டுள்ளது.  இந்த டிரோன்கள் மூலம் ஊராட்சிகளை சுற்றியுள்ள கிராம மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் தாங்கள் சாகுபடி செய்துள்ள வேளாண்மை பயிர்களுக்கு நவீன முறையில், குறைந்த வாடகையில், குறுகிய நேரத்தில் உரங்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகளை பயிர்களுக்கு விரைவாக தெளித்து பொதுமக்கள் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా