கோவை அருகே மூதாட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (மார்ச்.26) அதிகாலை 65 வயதான மூதாட்டியை 3 வட மாநில தொழிலாளர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இதனால், மூதாட்டி கதறித்துடிக்க அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களை சுற்றி வளைத்த பொதுமக்கள் 2 பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மேலும், தப்பியோடிய ஒருவரை போலீசார் தேடிப்பிடித்து கைது செய்தனர்.