பட்டுக்கோட்டை அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் திருவிழா கடந்த 18-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. விழா நாட்களில் தினமும் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாமி வீதி உலா நடந்து வந்தது. இதைத் தொடர்ந்து நேற்று மாலை தேர்த் திருவிழா நடந்தது. 6.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. தேர் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று இரவு 8.30 மணிக்கு நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.