பட்டுக்கோட்டை: குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது
பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜா மடம் அக்னி ஆற்று பாலத்தின் அருகில் கடந்த செப்டம்பர் மாதம் 28 ம் தேதி 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக முத்துப்பேட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் புகார் செய்தார். இதன்பேரில் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கவிதா வழக்கு பதிவு செய்து திருவாரூர் மாவட்டம் முக்குலத்து சாத்தனுாரை சேர்ந்த தவசீலன்(20), முத்துப் பாண்டியன் (27) ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த குற்றவாளிகளை பட்டுக்கோட்டை டிஎஸ்பி ரவிச்சந்திரன் கொடுத்த தகவலின்படி எஸ். பி ஆஷிஸ் ராவத் பரிந்துரையின் பேரில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவின்படி தவசீலன், முத்துபாண்டியன் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்