தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கழுகுப்புலிக்காடு ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், பிரதம மந்திரி சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கழுகுபுலிக்காடு முதல் பைங்காட்டு வயல் வரை ரூ. 2 கோடியே 15 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்க விழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
கழுகுப்புலிக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் சு. பாஸ்கர் தலைமை வகித்தார். தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச. முரசொலி, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று புதிய சாலைப்பணியை துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் அலிவலம் அ. மூர்த்தி, பட்டுக்கோட்டை மேற்கு திமுக ஒன்றியச் செயலாளர் பா. ராமநாதன், பட்டுக்கோட்டை ஒன்றியக்குழு தலைவர் டி. பழனிவேல், துணைத் தலைவர் லெ. முருகானந்தம், ஒன்றியக்குழு உறுப்பினர் ஏ. ராஜேந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள்
ரூஸ்வெல்ட், அ. அப்துல் மஜீத், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வீர. சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜான் கென்னடி, கை. கோவிந்தராஜ், ஒன்றிய செயற்பொறியாளர் பி. செல்வராஜ், உதவி செயற்பொறியாளர் வி. ராஜேந்திரன், ஒன்றியப் பொறியாளர் ஆர். லதா, திமுக நிர்வாகிகள், கிராம பிரமுகர்கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.