சூரிய மின்சக்தி திட்டங்களை பெற இந்திய அதிகாரிகளுக்க ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. அதானி குழு தலைவருக்கும், அவரது மருமகன் சாகருக்கும் அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் சம்மன் அனுப்பியுள்ளது. அதில், “21 நாட்களில் குற்றச்சாட்டு குறித்து உங்கள் தரப்பு விளக்கத்தை, நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். பதிலளிக்க தவறினால், குற்றத்தை ஒப்புக் கொண்டதாக பதிவு செய்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என குறிப்பிட்டுள்ளது.