தஞ்சாவூரில் தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் 75-ஆவது நிறுவன நாள் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சாரண, சார ணியர் இயக்கத்தின் கொடி, சிறப்புப் பெருந்திரளணியின் முதல் அறிவிப்பு இதழ், இலச்சினை ஆகியவற்றை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட, அவற்றை அமைச்சர்கள் கோவி. செழியன் (உயர் கல்வித் துறை), அன்பில் மகேஸ் பொய்யாமொழி (பள்ளிக் கல்வித் துறை), டி. ஆர். பி. ராஜா (தொழில் துறை) ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
மேலும், பாரத சாரண, சாரணியர் இயக்கம் சார்பாக திருச்சி மாவட் டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் நடைபெறவுள்ள பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைரவிழா,
கருணாநிதி நூற்றாண்டு விழா சிறப்புப் பெருந்திரளணியின் தலைவராக துணை முதல்வர் பதவியேற்றார். பாரத் சாரண சாரணியர் இயக்கத்தின் 75-ஆவது நிறுவன் ஒட்டு வில்லையை சாரணர்களின் சட்டையில் துணைமுதல்வர் அணிவித்தார். இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச. முரசொலி மாவட்ட ஆட்சியர்கள் பிரியங்கா பங்கஜம் (தஞ்சாவூர்), மா. பிரதீப் குமார் (திருச்சி) சாரண, சாரணியர் இயக்க முதன்மை ஆணையர் க. அறிவொளி, பெருந்திரளணி சிறப்பு அலுவலர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் பூ. ஆ. நரேஷ் மாநில தலைமையக ஆணையர்கள் மார்ஸ், சண்முகவேல், முதன்மைக் கல்வி அலுவலர்கள் அண்ணாதுரை (தஞ்சாவூர்), கிருஷ்ணபிரியா (திருச்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.