குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் காவல் எஸ். ஐ உடல் அடக்கம்

74பார்த்தது
மதுக்கூர் மற்றும் பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையம் ஆகிய காவல் நிலைய சரகங்களுக்கு உட்பட்ட பகுதியில் உளவுத்துறை சிறப்பு பிரிவில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருபவர் செந்தில்குமார். இவர் நேற்று தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தஞ்சை பகுதியில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக வருகை தந்ததை ஒட்டி தஞ்சாவூருக்கு பாதுகாப்பு பணிக்கு சென்று விட்டு மீண்டும் பட்டுக்கோட்டை நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத வகையில் வேன் மோதியது. இதில் செந்தில்குமார் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிவுற்று அவரது உடல் அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் அங்கு அவரது உடலுக்கு தஞ்சை மாவட்ட எஸ்பி ஆசிஸ் ராவத் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தஞ்சை சாலையில் உள்ள மின் மயானத்தில் குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி