மழையால் நனைந்து வீணாகும் கருவாடு... வியாபாரிகள் கவலை

83பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம்
பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனால் கருவாடு வியாபாரிகள் துறைமுகப் பகுதியில் மீன்களை ஏலத்துக்கு எடுத்து உப்பு தண்ணீரில் ஊற வைத்து வெயிலில் காய வைத்து அதை பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, பேராவூரணி, மதுக்கூர் மற்றும் கிராம பகுதியில் உள்ள மார்க்கெட் மற்றும் சந்தைப்பகுதிகளில் சில்லறையாகவும், மொத்தமாகவும் விற்பனை செய்து வருகின்றனர். நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர். வியாபாரிகள் துறைமுக பகுதிகளுக்கு சென்று மீன்களை மொத்தமாக வாங்கி சுத்தப்படுத்தி உப்பு நீரில் ஊற வைத்து வெயிலில் உலர வைத்து கருவாடுகளை விற்பனை செய்து வருகின்றனர். அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இந்த மழையால் அதிராம்பட்டினம் கடற்கரை
பகுதியில் காய வைக்கப்பட்ட கருவாடுகள் நனைந்து வீணாவதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து கருவாடு வியாபாரி கூறுகையில்,
இந்த கருவாடுகளை விற்பனை செய்யும் நேரத்தில் மழை பெய்வதால் தண்ணீர் நனைந்து முற்றிலும் வீணாகிறது.
மழை காலங்களில் கருவாடுகளை பாதுகாக்க கட்டிட வசதி இல்லாததால் தண்ணீரில் நனைந்து வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மழைகாலங்களில் கருவாடுகளை பாதுகாத்து காய வைக்க கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி