நான்காம் வகுப்பு படிக்கும் மாணவனை பள்ளி தலைமை ஆசிரியர், செருப்பு காலால் உதைத்ததாக புகார்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அலிவலம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் ஆதி திராவிட நல அரசு தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வரும் ஹரிஸ்வரன் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் சக மாணவியின் பொருளைத் திருடியதாக சந்தேகப்பட்ட தலைமை ஆசிரியர், இரண்டு மாணவர்களையும் தாக்கி காயப்படுத்தியதாக பெற்றோர்கள் புகார் கூறி பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் வீரமணி இரண்டு மாணவர்களின் காதை பிடித்து கிள்ளியதாகவும், தலை முடியை பிடித்து அடித்து கீழே பள்ளி செருப்புகாலால் எட்டி உதைத்து, அவர்கள் மீது எச்சில் துப்பியதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறுகின்றனர். தொடர்ந்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதை தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் ராமச்சந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தார். தொடர்ந்து அவரிடம் நாம் விசாரித்த பொழுது உடனடியாக அவரை பணியிட மாற்றம் செய்ய போவதாகவும், அரசு சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது