2 கோடி மதிப்பிலான போதைப் பொருளை கைப்பற்றிய போலீசார் இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்டதா என விசாரணை
பட்டுக்கோட்டை அருகே கடற்கரையோரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 கோடி மதிப்புள்ள மெத்த பெட்டமின் போதைப்பொருளை கடலோர காவல் படையினர் கைப்பற்றினர்- இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்டதா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கீழத்தோட்டம் கடற்கரையோரம் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி பட்டுக்கோட்டை கடலோர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மஞ்சுளா மற்றும் அதிராம்பட்டினம் கடலோர காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் பிச்சை வேம்பு உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்த சுமார் 2 கோடி மதிப்பிலான பாலிதீன் பையில் கட்டப்பட்டு பதிக்கி வைக்கப்பட்டிருந்த 950 கிராம் மெத்த பெட்டமின் போதைப் பொருளை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இதை பதிக்கி வைத்திருந்தவர் யார்? இலங்கையில் இருந்து இந்த போதைப் பொருள் படகுமூலம் கடத்தி வரப்பட்டதா? என்பது பற்றி பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மெத்த பெட்டமின் , போதை மருந்து தயாரிக்கப்படுவதற்கான மூலப்பொருள் என்றும் இதன் விலை மதிப்பு மிக அதிகம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.