பட்டுக்கோட்டை - Pattukottai

தஞ்சாவூர்: வயல்வெளியில் மதுபாட்டில்களை வீசி செல்வதால் விவசாயிகள் அவதி

தஞ்சாவூர்: வயல்வெளியில் மதுபாட்டில்களை வீசி செல்வதால் விவசாயிகள் அவதி

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகளவு கிராமப்புற பகுதிகள் அடங்கி உள்ளது. இப்பகுதி மக்களின் முக்கிய தொழில் என்றால் அது விவசாயம்தான். தஞ்சாவூர் மாவட்டத்தில் முப்போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் கரும்பு, வாழை, உளுந்து, கடலை என பிற பயிர் சாகுபடியும் மேற் கொள்ளப்படுகிறது. தற்போது 8. கரம்பை, சிவகாமிபுரம், ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி, பூதலூர் உட்பட பகுதிகளில் சம்பா சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். சில விவசாயிகள் நிலத்தை தரிசாக போட்டுள்ளனர். இதுபோன்று சாகுபடி மேற்கொள்ளாத வயல்களை இரவு நேரத்தில் மதுப்பிரியர்கள் திறந்தவெளி மதுக்கூடமாக மாற்றி விடுகின்றனர். இருசக்கர வாகனத்தின் முகப்பு விளக்கை மட்டும் எரிய விட்டு அந்த வெளிச்சத்தில் மதுபானங்களை அருந்துகின்றனர். மேலும் மதுபாட்டில்களையும் வயல்களிலேயே உடைத்து விட்டு செல்கின்றனர். மேலும் சாகுபடி நடந்துள்ள வயல்களில் தடுமாறி விழுந்து எழுந்து செல்கின்றனர். இதனால் நாற்றுக்கள் நசுங்கி விடுகிறது. இது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. எனவே இதுபோன்று வயல்களை திறந்தவெளி மதுக்கூடமாக மாற்றுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా