வக்ஃப் வாரிய சட்டத்திருத்தம் கொண்டு வரும் பாஜக அரசைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் மத்திய அரசு கொண்டுவரும் வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கட்சி தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் அப்துர் ரஹீம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து கண்டன உரையாற்றினார். 200 க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கைகளில் பதாகைகளை ஏந்தியபடி மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.