சவுதி அரேபியாவில் இன்று ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறுகிறது. 367 இந்திய வீரர்களும், 210 வெளிநாட்டு வீரர்களும் என மொத்தம் 577 வீரர்கள் ஏலப்பட்டியலில் உள்ளனர். ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், பட்லர், ஸ்டார்க் உள்ளிட்ட 81 வீரர்கள் அடிப்படைத் தொகையாக ரூ.2 கோடி நிர்ணயித்துள்ளனர். அதிகபட்சமாக பஞ்சாப் அணி 110 கோடியே 50 லட்சம் ரூபாயும், குறைந்தபட்சமாக ராஜஸ்தான் அணி 41 கோடி ரூபாயும் இருப்பு வைத்துள்ளது. சென்னை அணி ரூ.55 கோடியும், மும்பை அணி ரூ.45 கோடியும் இருப்பு வைத்துள்ளது