தஞ்சை கடற்கரையில் கொட்டும் மழையில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை
தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார கடலோர பகுதியில் நேற்று அதிகாலை 6 மணியளவில் சீ-விஜில் என்ற பெயரில் போதுகாப்பு தீவிரவாத தடுப்பு ஒத்திகை பயிற்சி கொட்டும் மழையில் நடைபெற்று வருகிறது. அதிராம்பட்டினம் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் கடலோர காவல் குழு இன்ஸ்பெக்டர் மஞ்சுளா ஆகியோர் பணியில் மேற்பார்வையிட, சப்-இன்ஸ்பெக்டர்கள் வேம்பு, சுப்பிரமணியன், கடலோர காவல்படை போலீசார்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீசார் அதிராம்பட்டினம் கடலோர பகுதியில் ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் பகுதியில் தீவிரவாத தடுப்பு ஒத்திகைப் பயிற்சியில் ஈடுபட்டனர். இதில் படகு இறங்குதளங்கள், சோதனைச்சாவடிகள், மற்றும் கிழக்குக்கடற்கரை சாலைகள் என அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். போலீசார் கடலில் மீனவர்களிடம் அடையாள அட்டை மற்றும் படகுக்குரிய ஆவணங்கள் உள்ளதா என ஆய்வு செய்தனர். இதுதவிர ரகசிய போலீசாரும் ஆங்காங்கே கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.