நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்.27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்றது. மாநாட்டில் விஜய் பேசிய பேச்சைக் கண்டு பலரும் வியந்தனர். இந்நிலையில், விஜய்யின் பேச்சு குறித்து அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், “மாநாட்டில் என் புள்ள கலக்கிட்டாரு. விஜய் இப்படி பேசுவாருனு நினைக்கல. அரண்டுபோய், மிரண்டுபோயிட்டேன்” என மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.