மலையாள நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா, இடவேள பாபு, பாலச்சந்திர மேனன் உள்ளிட்ட 7 பேர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாரை வாபஸ் பெறுவதாக அலுவாவைச் சேர்ந்த நடிகை ஒருவர் அறிவித்துள்ளார். அரசாங்கத்தின் ஆதரவு இல்லாததே வழக்கில் இருந்து பின்வாங்குவதற்கான காரணம் என்று அவர் குறிப்பிட்டார். முன்பு தாக்கல் செய்த போக்சோ வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை என்றும் நடிகை கூறியுள்ளார். ஹேமா கமிட்டி விசாரணையின் ஒருபகுதியாக பல மலையாள நடிகர்கள் பாலியல் புகார்களில் சிக்கினர்.