மேற்கு வங்கத்தின் சோனாமுகி கிராமத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அங்கு, கடந்த 18 ஆம் தேதி சென்ற 6 மாத கர்ப்பிணிக்கு வயிற்று வலி ஏற்பட, அங்குள்ள கழிவறைக்குச் சென்றுள்ளார். அங்கு குறைப்பிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது. உதவிக்கு ஊழியர்களை அழைத்தும் யாரும் வரவில்லை எனத் தெரிகிறது. அந்நேரம் அங்கு சுற்றித் திரிந்த நாய் ஒன்று, குழந்தையை கவ்விக்கொண்டு அங்கிருந்து சென்றது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.