அதிமுகவுக்கான ஒரே அவசர சிகிச்சை அனைவரும் ஒன்றிணைவது மட்டும் தான் என அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், 'கவலைக்கிடமாய் கிடக்கும் அதிமுகவுக்கான ஒரே அவசர சிகிச்சை அனைவரும் ஒன்றிணைவது மட்டும் தான். அது கை கூடாது போனால், அதிமுக மதிமுகவாகும். தவெக அதிமுகவாக மாறும். என்ன நாஞ் சொல்றது' என கூறியுள்ளார். அதிமுகவுடன் கூட்டணி என்பதை விஜய் ஏற்கனவே மறுத்திருந்தார்.