திண்டுக்கல் காவலபட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 5 பேர், ப்ரைடு ரைஸ் கடையில் கிரில் சிக்கன் சாப்பிட்டுள்ளனர். அப்போதே கிரில் சிக்கன் வேகாமல் இருப்பதாக உரிமையாளரிடம் முறையிட்டனர். இந்த சூழலில், வீட்டிற்கு சென்ற 5 பேருக்கும் வயிற்றுப்போக்கு, வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என இளைஞர்கள் கூறுகின்றனர்.