பட்டுக்கோட்டை: இறந்து விட்டதாக கருதப்பட்ட மூதாட்டி, மீண்டு வந்த அதிசயம்
பட்டுக்கோட்டை அருகே பால் ஊற்றி இறந்து விட்டதாக நினைத்த 105 மூதாட்டி உடல் நலம் பெற்று வெற்றிலை பாக்கு இடித்துதின்று உலா வரும் அதிசயம் உறவினர்கள் மகிழ்ச்சி தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள திருவோணம் ஒன்றியத்துக்குட்பட்ட பாதிரங்கோட்டை தென்பாதி ஆண்டாள் கொள்ளை கிராமத்தை சேர்ந்தவர் மாரியாயி 105 வயது உள்ள மூதாட்டிக்கு 70 வயதில் செல்லம்மாள் சுப்பம்மாள் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர் மாரியாயி கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் மாரியாயி மூத்த மகள் சுப்பம்மாள் வீட்டில் வசித்து வருகிறார். மூதாட்டி மாரியாயிக்கு 14 கொள்ளு பேரன் பேத்திகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மரியாதைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இனி பிழைக்க மாட்டார் என்று நினைத்து உறவினர்கள் அவருக்கு பால் கொடுத்து இறந்து விட்டதாக நினைத்த நிலையில் உடல் நலம் தேறி தற்போது மாரியாயி வெற்றிலை பாக்கு இடித்து தின்று தன் வேலைகளை அவரே செய்து கொண்டு நடமாடி வருவது உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடம் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.