இளம் பெண்ணிடம் அத்துமீறல்- ஒருவரை காவல்துறை கைது செய்தது

79பார்த்தது
பாப்பாநாடு அருகே ஆம்பலாபட்டு, பரங்கி வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி ஜூலியர் வளர்மதி (வயது 24). இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பாப்பாநாடு ஆம்பல் நகர் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் செந்தில்குமாரிடம் ரூபாய் 50, 000 வட்டிக்கு கடன் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களாக ஜூலியர் வளர்மதி வட்டிப் பணம் கொடுக்காததால், நேற்று புதன்கிழமை இரவு வட்டிப் பணம் கேட்டு ஜூலியர் வளர்மதி வீட்டுக்கு பணம் கொடுத்த செந்தில்குமார் சென்றுள்ளார்.
அங்கு பணம் கேட்டபோது தற்போது ரூபாய் 5000 மட்டும் தான் உள்ளது. மீதி பணத்தை கொஞ்ச நாளில் கொடுத்து விடுகிறோம் என்று கூறி ரூபாய் 5 ஆயிரத்தை செந்தில்குமார் வசம் ஜூலியர் வளர்மதி கொடுத்துள்ளார்.

அப்போது செந்தில் குமார் ஜூலியர் வளர்மதியை கட்டிப்பிடித்து பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் வட்டிப் பணம் 5000 ல் 2500 ஐ உன் செலவுக்கு வைத்துக் கொள் என செந்தில்குமார் கொடுக்க முயன்றதாகவும், அந்தப் பணத்தை ஜூலியர் வளர்மதி வாங்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. பாப்பாநாடு காவல் நிலையத்தில் இது பற்றி புகார் கொடுக்கப்பட்டது. புகாரையடுத்து செந்தில்குமாரை போலீசார் கைது செய்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி