கும்பகோணம் உள்ளூர் ஊராட்சி, ராமகிருஷ்ண நகர் இரண்டாம் தெருவில் மின்வாரிய மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூபாய் 4, 16930 மதிப்பீட்டில் 25 கிலோ வாட்டில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மின்மாற்றியை கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார். இதில் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.