அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு நேற்று (அக். 20) அளித்த பேட்டியில், “தமிழகத்தில், தற்போது செயல்படாத அரசாக தி.மு.க. அரசு உள்ளது, இந்த அரசை நீக்க வேண்டும். அத்துடன், தமிழகம் போதை மாநிலமாகவும் மாறி வருகிறது. மாநிலத்தில் உண்மையான விடியல் ஆட்சி, இபிஎஸ் தலைமையில் 2026-ல் அமையும். அப்போது, மதுரையில் 10 சட்டசபை தொகுதிகளையும் கைப்பற்றி சாதிப்போம். இதேநிலை தமிழகம் முழுவதும் அமையும்.” என்றார்.