ஒரத்தநாடு - Orathanadu

தஞ்சை: ஆதிதிராவிடர் மக்கள் நிலம் வாங்க வேண்டுமா? மானியக் கடனுதவி

தஞ்சை: ஆதிதிராவிடர் மக்கள் நிலம் வாங்க வேண்டுமா? மானியக் கடனுதவி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலம் மகளிர் நில உடமை திட்டத்தின் கீழ் விவசாய தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் விவசாய நிலம் வாங்குவதற்கு மானியத்துடன் கிரைய தொகையை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் குறைந்த வட்டியில் கடனாக பெற்று வாங்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் செய்தி வெளியிட்டுள்ளார். ஆதிதிராவிட மக்கள் விவசாய நிலம் வாங்க சந்தை மதிப்பீட்டின்படி திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ. 5 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100% முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. இப்போது பயனாளிகள் பங்குத்தொகை இல்லாமல் மானியத்தொகை போக எஞ்சிய கிரையத் தொகையை தேசிய பட்டியல் இனத்தோர் மேம்பாட்டு கழக நிதியிலிருந்து ஆறு சதவீதம் என்ற மிகக் குறைந்த வட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் கடனாக பெற்று நிலம் வாங்க விண்ணப்பம் வழங்கப்படுகிறது. தாட்கோ இணையதள முகவரியில் www. tahdco. com இல் விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా