ஒரத்தநாடு - Orathanadu

தஞ்சை: அண்ணா சிலை மீது தி. மு. க கொடியுடன் பா. ஜ. க கொடியால் பரபரப்பு

தஞ்சை: அண்ணா சிலை மீது தி. மு. க கொடியுடன் பா. ஜ. க கொடியால் பரபரப்பு

தஞ்சாவூர், பழைய பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை உள்ளது. இன்று காலை, திமுக, பாஜக, கொடி இணைக்கப்பட்டு, அண்ணா சிலையில் போடப்பட்டிருந்தது. இதை பார்த்த, அப்பகுதியினர் மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த காவல்துறையினர் அண்ணா சிலை மீது இருந்த கொடியை அகற்றி, விசாரணையில் இறங்கினர். இதற்கிடையில், அண்ணா சிலை அருகே உள்ள மாநகராட்சி நுாற்றாண்டு அரங்கத்தில், தி. மு. க. , மகளிர் அணி, முகவர்கள், தொண்டர் அணியின் பயிற்சி பட்டறைக் கூட்டம் நடந்தது. அப்போது, கூட்டத்திற்காக வந்த தி. மு. கவினர் பலரும், அண்ணா சிலையில், பா. ஜ. க, தி. மு. க. , கொடியுடன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், காவல்துறையினர் கொடியை அகற்றிய பிறகு, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்து விட்டு தி. மு. க. வினர் கூட்டத்திற்கு சென்றனர். போலீசார் நடத்திய விசாரணையில், அங்கு சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தான், திமுக, கம்யூனிஸ்ட், பாஜக, அதிமுக கொடிகளை இணைந்து, அண்ணா சிலைக்கு போட்டது தெரிந்தது. அவரிடம் காவல்துறையினர் விசாரித்த போது, கொடியை சேகரித்து கீழே வைத்தால், யாராவது எடுத்துக்கொண்டு போய் விடுகிறார்கள். அதனால் தான் அண்ணா சிலை மீது போட்டு விட்டு, டிராபிக்கை கிளியர் செய்து கொண்டு இருந்தேன் என கூலாக பதில் அளித்து விட்டு சென்றார். இதனால் காவல்துறையினர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా