ஒரத்தநாடு: பனை விதைகள் நடும் பணி
ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி கீழையூரில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்க பனை விதை நடும்பணி நடந்தது. கண்ணந்தங்குடி கீழையூரில் கே.ஆர்.சி. நினைவு பொதுநல சங்கம் சார்பில் சுற்றுசூழல் பாதுகாக்கவும், மழைநீரை பூமிக்குக் கொண்டுவந்து நிலத்தடியில் சேகரிக்கவும், மண் அரிப்பைத் தடுக்கும் வகையில் பனை விதைகளை நடும் பணியை மேற்கொண்டனர். ஊராட்சி தலைவர் மாரிமுத்து தலைமையில், ஒன்றிய கவுன்சிலர் சிலம்பரசன், சங்க தலைவர் அம்பிகாபதி, செயலர் மகேந்திரன், பொருளாளர் வேணுகோபால் ஆகியோர் முன்னிலையில் விவசாயிகள் குருசானோடை குளக்கரையில் ஆயிரம் பனை விதைகள் நட்டனர்.