தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா நடுவிக்கோட்டை அருகே செக்கடிக்கொல்லை பகுதியில் வசிப்பவர் செல்வம். இவருடைய மகன் சுப்பன் என்கிற பாலசுப்பிரமணியன் (வயது 42). இவர் பாலியல் வழக்கில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் பரிந்துரையின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பசுபதி வழக்கு ஆவணங்களை கலெக்டரிடம் தாக்கல் செய்தார்.
இந்த ஆவணங்களை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பரிசீலனை செய்து பாலசுப்பிரமணியன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து பாலசுப்பிரமணியன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான ஆவணங்களை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினர்.