தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற ரத்த தான நாள் விழாவையொட்டி ரத்ததானம் வழங்கிய தன்னார்வவர்கள் மற்றும் அமைப்புகளுக்கு சான்றிதழ் கேடயத்தை மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் வழங்கி பாராட்டினார். இந்த விழாவுக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர். பாலாஜிநாதன் தலைமை வகித்தார்.
இதில் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கிய அமைப்புகள், கல்லூரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார். மேலும் மாவட்டத்தில் அதிகமாக 583 யூனிட் ரத்த தானம் வழங்கி முதலிடம் வகிக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட நிர்வாகத்துக்கு சான்றிதழ் மற்றும் கேடயத்தை ஆட்சியர் வழங்கி பாராட்டினார்.
சுகாதாரத் துறை துணை இயக்குநர் (பொ) ஹேமசந்த் காந்தி, மாநகர நல அலுவலர் வீ. சி. சுபாஷ் காந்தி, மருத்துவக் கண்காணிப்பாளர் சி. ராமசாமி, மருத்துவர் வேல்முருகன், குருதி பரிமாற்ற சிறப்பு அலுவலர் கிஷோர்குமார், பட்டுக்கோட்டை மருத்துவர் சீனிவாசன், கும்பகோணம் குருதி மருத்துவர் சுகந்தி, சிந்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.