தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் கண்ணுகுடி-பாப்பாநாடு பிரதான சாலையில் இருந்து கண்ணுகுடி மயில் ஏரி, கழனி படை அப்பனார் கோயில் மற்றும் சிவன் கோயில் வழியாக ஆம்பலாபட்டுக்கு இணைப்பு சாலை செல்கிறது. சுமார் 5 கி. மீட்டர் தூரமுள்ள இந்த சாலை கண்ணுகுடி மற்றும் ஆம்பலாப்பட்டு கிராம மக்களின் மிக முக்கிய போக்குவரத்து சாலையாக இருக்கிறது. தற்போது இந்த தார்ச்சாலை சேதமடைந்து குண்டும்- குழியுமாக காட்சி அளிக்கிறது.
இதனால் இந்த சாலையில் பயணிக்க முடியவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். எனவே கண்ணுகுடி மற்றும் ஆம்பலாப்பட்டு கிராம மக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் கண்ணுகுடியிலிருந்து மயில் ஏரி, கழனி படை அய்யனார் கோயில் மற்றும் சிவன் கோயில் வழியாக ஆம்பலாப்பட்டுக்கு செல்லும் இணைப்பு சாலை சீரமைக்கப்படுமா? என்று இப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.