திருப்பத்தூர் - Tiruppattur

சிறுவர்களை பணியில் ஈடுபடுத்திய ஊராட்சி மன்ற தலைவர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மேலபட்டமங்கலம் கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன், பல்வேறு துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். அப்போது கிராமத்தின் தேவைகள், குறைகள் இருந்தால் தெரிவிக்குமாறு ஆட்சியர் அறிவித்தபோது சற்று அமைதி நிலவியது. இந்நிலையில் சிறுவர்கள் தங்களுக்கு விளையாட்டு மைதானம் வேண்டும், தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும், இடிந்த நிலையில் இருக்கும் குடிநீர் தொட்டியினை அப்புறப்படுத்த வேண்டும், புதிய ரேஷன் கடையை அமைக்க வேண்டும் என தைரியமாக பேசினர். பின்னர் பேசிய அமைச்சர் கேஆர். பெரியகருப்பன், அழுத பிள்ளை தான் பால் குடிக்கும் என்பது போல கிராமத்திற்காக தைரியமான பேசிய சிறுவர்களை பாராட்டினார். மேலும் கிராம மக்களின் தேவைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். கிராம சபை கூட்டம் நிறைவடைந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரன் சிறுவர்களை மேஜை நாற்காலிகளே அப்புறப்படுத்தும் பணிகள் ஈடுபடுத்தினார். அமைச்சரால் பாராட்டப்பட்ட சிறுவர்கள் சிறிது நேரத்திலேயே எடுபிடி வேலைக்காக ஊராட்சி மன்ற தலைவர் பணியில் ஈடுபடுத்திய சம்பவம் அதிர்ச்சிகுள்ளாக்கியது.

வீடியோஸ்


சிவகங்கை